எம்மைப் பற்றி
பாசல் மாநிலத்தில் வாழும் சமுக அக்கறை கொண்ட சிலரின் முயற்ச்சியால் 1998 சித்திரைமாதம் முதலாவது ஒன்றுகூடல் Landkronstrasse 4056 Basel எனும் இடத்தில் இடம்பெற்றது. இவ் ஒன்றுகூடலில் பாசல் மாநிலத்தில் ஓர் பொது அமைப்பு தேவை என்பது தீர்மானிக்கப்கட்டு அதன் பெயரும் நோக்கமும் தீர்மானிக்கப்பட்டது.
1998 கார்த்திகை மாதம் Lichtstrasse 3, 4057 Basel என்னும் இடத்தில் இரண்டு அறைகள் கொண்ட ஓர் இடத்தை வாடகைக்கு எடுத்து அதை தனது தளமாக கொண்டு செயற்ப்பட்டது.
மொழி வகுப்புகள் இளையோர் சந்திப்புகள் நூல்நிலையம் தையல்வகுப்புகள் என்பவற்றுடன் இந்தியாவின் முதன்மைப்பதிப்பகமான மணிமேகலை பதிப்பகத்துடன் இணைந்து பாசல் மாநிலத்தில் பலதடவைகள் புத்தகக்கண்காட்சியையும் விற்ப்பனையையும் நடத்திவந்தது.
2002 ம் ஆண்டு மாசிமாதம் தொடக்கம் புதுப் பொலிவுடன் Wattstrasse 4, 4056 Basel என்னும் முகவரிக்கு மாற்றப்பட்ட அதன் சேவை விஸ்தரிக்கபட்டு இயங்கிவருகின்றது.
பாசல் மாநிலத்தில் வாழும் தமிழ் மக்களுடைய முன்னேற்றத்தையும் குறிப்பாக இளையதலைமுறையின் தேவையைப் நிவர்த்திசெய்து அவர்களின் முன்நேற்றத்திக்குத் துணைநின்று அவர்களை ஓர் உன்னத நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற பேராவையும் தாங்கி நிற்கின்றது. எமது சமூகத்தினை ஓர் ஒன்றுபட்ட சமூகமாக ஒற்றுமையின் அடையாளமாக வளர்த்தெடுப்பது என்பதே தனது முதற்கடமையாகக் கொண்டு செயற்படுகின்றது.

Anmelde Forumular | Application Form | விண்ணப்பப்படிவம்